முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு 2.8 பில்லியன் டாலர் பிரிட்டன் நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      உலகம்
Jelensky 2024 08 19

Source: provided

லண்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான சந்திப்புக்கு பிறகு பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ஐரோப்பிய தலைவர்களை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி சந்திக்கவுள்ளார். முன்னதாக உக்ரைனுக்கு 2.8 பில்லியன் டாலர் பிரிட்டன் நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

லண்டனில் நேற்று (மார்ச் 2) நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஐரோப்பிய தலைவர்களை சந்திப்பதற்காக, சனிக்கிழமை பிரிட்டன் சென்றார். மேலும், சனிக்கிழமையில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி சந்தித்து, உக்ரைனுக்கு 2.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களை விரைவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின்படி, முதல் தவணை நிதி அடுத்த வாரம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்ததாவது உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பில், உக்ரைன் மீது அசைக்க முடியாத எனது ஆதரவை உறுதியாகக் கொள்கிறேன். மேலும் உக்ரைனுக்கு தேவையான திறன், பயிற்சி, உதவிகளை வழங்குவதற்கான எனது உறுதிப்பாட்டை இரட்டிப்பாக்குவேன். உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவியை உறுதிப்படுத்துவதற்கும், ஐரோப்பியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நமது நாடுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் நாம் ஒன்றுபட வேண்டிய நேரமிது’’ என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து