முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸாவுக்குள் உதவிப்பொருள்கள் செல்வதை நிறுத்தியது இஸ்ரேல்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      உலகம்
Israel

Source: provided

டெல்அவிவ்: காஸா பகுதிக்குள் உதவிப் பொருள்கள் நுழைவதை நிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

நிரந்தர போர் நிறுத்தம் அறிவிப்பதற்கு கால அவகாசம் தேவை எனக் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் தற்போதைய போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்த அமெரிக்காவின் முன்மொழிவை ஹமாஸ் ஏற்காவிட்டால் அதற்கான விளைவுகளைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் முதற்கட்ட போர்நிறுத்தம் (மார்ச். 1) முடிவடைந்தது. இருதரப்பினரும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. மேலும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தனது படைகளை முழுமையாக விடுவித்து, ஹமாஸ் அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கவேண்டும்.

போர்நிறுத்தத்தை ரமலான் அல்லது ஏப்ரல் 20 வரை நீடிக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், டிரம்ப்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் என்பவரிடமிருந்து இந்த முன்மொழிவு பெறப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதன்படி, இரண்டாம் கட்ட போர்நிறுத்தத்தின் முதல் நாளில் ஹமாஸ் பாதி பணயக்கைதிகளை விடுவிக்கவேண்டும் என்றும், மீதமுள்ளவர்களை நிரந்தர போர்நிறுத்தத்திற்குப் பின்னர் விடுவிக்கவேண்டும் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து