முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மார்ச் 7-ல் மின்நுகர்வு 40.62 கோடி யூனிட்டாக பதிவு

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      தமிழகம்
Electricity 2023-06-0

Source: provided

சென்னை : கோடைக்காலம் தொடங்கிய சில நாட்களிலேயே தினசரி மின்தேவை அதிகரித்துள்ளது. கடந்த 7-ம் தேதியன்று தினசரி மின்தேவை மிக அதிகபட்ச அளவாக 40.62 கோடி யூனிட்டுகளாக பதிவாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கடை, வீடுகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும், ஒரு நாள், அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு மின்நுகர்வு எனப்படுகிறது. இது தினசரி சராசரியாக 30 கோடி யூனிட்டுகளாக உள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி தினசரி மின்நுகர்வு 45.43 கோடி யூனிட்டுகளாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோடைக்காலம் தற்போது தொடங்கி ஒருசில நாட்கள் ஆகிறது. அத்துடன், பள்ளி, கல்லூரிகளில் இறுதித் தேர்வு நடப்பதாலும் வீடுகளில் வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின்பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

இத்தகைய காரணங்களால் கடந்த 7-ம் தேதியன்று தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 40.62 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இதுவே நடப்பாண்டில் இதுவரையிலான மின்நுகர்வில் அதிகபட்ச அளவாகும். மின்நுகர்வுக்கு ஏற்ப மின்னுற்பத்தி மற்றும் மின்கொள்முதல் செய்யப்பட்டதால் மின்தேவை எளிதாக பூர்த்தி செய்யப்பட்டது. வரும் நாட்களில் தினசரி மின்தேவை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து