முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் தொடருக்கான நியூசி. அணியில் முக்கிய வீரர்கள் இல்லை

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      விளையாட்டு
New-Zealand 2024-02-16

Source: provided

கிறிஸ்ட்சர்ச் : பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை  

நியூசிலாந்து பயணம்... 

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி மார்ச் 16 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.

அணி அறிவிப்பு...

விரைவில் டி20 தொடர் தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று (மார்ச் 11) அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய வீரர்கள் இல்லை... 

நியூசிலாந்து அணி வீரர்கள் பலரும் ஐ.பி.எல்.  தொடரில் விளையாடுவதால், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் அவர்கள் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஐ.பி.எல்.  தொடரில் விளையாடவுள்ளதால், டெவான் கான்வே, லாக்கி பெர்குசன், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியிலிருந்து விலகிய மாட் ஹென்றி, பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது மற்றும் 5-வது டி20 போட்டியில் விளையாடவுள்ளார்.

நியூசிலாந்து அணி விவரம்...

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), பின் ஆலன், மார்க் சாப்மேன், ஜேக்கோப் டபி, ஸாக் போல்க்ஸ் (4 மற்றும் 5-வது போட்டிக்கு மட்டும்), மிட்ச் ஹே, மாட் ஹென்றி (4 மற்றும் 5-வது போட்டிக்கு மட்டும்), கைல் ஜேமிசன் (முதல் 3 போட்டிகளுக்கு மட்டும்), டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், வில்லியம் ஓ’ரூர்க் (முதல் 3 போட்டிகளுக்கு மட்டும்), டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செய்ஃபெர்ட், ஈஷ் சோதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து