முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி அணி கேப்டன் பதவியை நிராகரித்தார் கே.எல். ராகுல்?

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      விளையாட்டு
KL-Rahul 2023-08-29

Source: provided

புதுடில்லி : டெல்லி அணியின்  கேப்டன் பதவியை கே.எல். ராகுல் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கே.எல். ராகுல்... 

இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரான ஐ.பி.எல். 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இந்த தொடருக்காக கடந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது. இதனால் அவர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நிராகரிப்பு...

இந்நிலையில் கேப்டன் பதவியை நிராகரித்துள்ளதாகவும் ஒரு வீரராக அணிக்கு பணியாற்ற விரும்புவதாகவும் கேஎல் ராகுல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அக்சர் படேலை ரூ. 18 கோடிக்கு டெல்லி அணி தக்கவைத்தது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து