எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாடு 9.69 சதவீத உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69 சதவீதம் உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும்.
நிலையான விலைமதிப்பின்படி (அடிப்படை ஆண்டு: 2011-12), 2023-24ஆம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி , 2024-25-ம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் 2017-18ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி வீதம் 8.59% பதிவாகியுள்ளது. 2020-21ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குறைந்தபட்சமாக 0.07% எனப் பதிவாகியது. இக்காலகட்டத்தில் பல மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியினைக் கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு குறைந்தபட்சம் நேர்மறை வளர்ச்சியினைக் கொண்டிருந்தது.
உண்மை வளர்ச்சி வீதம் என்றால் என்ன?: பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே உண்மை வளர்ச்சி வீதம் ஆகும். பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே பெயரளவு வளர்ச்சி வீதம் ஆகும். 2024-25 ஆம் ஆண்டு தமிழ்நாடு 14.02 சதவீதம் பெயரளவு வளர்ச்சி வீதத்தினைப் பெற்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறது.
மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் குஜராத், பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி வீதத் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. தமிழ்நாடு அரசு முதன்முதலாக மார்ச் 2025 இரண்டாம் வாரத்தில் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் முன்கணிப்பு செய்யப்பட்ட வளர்ச்சி வீதத்துடன், ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட உண்மை வளர்ச்சி வீதம் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்தப் பொருளாதார ஆய்வு 8% க்கும் மேல் வளர்ச்சி இருக்கும் எனக் கணித்திருந்தது.
சென்னைப் பொருளியியல் நிறுவனத்தின் மூத்த பொருளாதார வல்லுநர்களான முனைவர் சி. ரங்கராஜன் மற்றும் முனைவர் கே.ஆர். சண்முகம் ஆகியோர் ஜூலை 2024ல் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வீதம் 9.3% ஆக இருக்கும் எனக் கணித்திருந்தனர். இறுதியில், மேற்குறிப்பிட்ட இரண்டு மதிப்பீடுகளையும் தாண்டி அதிக வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.
வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தவை: சேவைகள் துறையில் (மூன்றாம் நிலை) அடைந்த 12.7% வளர்ச்சியும் இரண்டாம் நிலைத் துறையில் அடைந்த 9% வளர்ச்சியுமே மாநிலம் அதிக வளர்ச்சியை எட்டியதற்கு முக்கியமான காரணிகளாகும். முதன்மைத் துறையின் செயல்பாடு வெறும் 0.15% மட்டுமேயாகும். மாநிலத்தின் மொத்த மதிப்புக் கூட்டலில் மூன்றாம் நிலைத் துறையின் பங்களிப்பு 53% ஆகும். இரண்டாம் நிலைத் துறை, முதன்மைத் துறையின் பங்களிப்பு முறையே 37%, 10% ஆகும்.
மூன்றாம் நிலைத் துறையினைப் பொருத்தவரையில் மனை வணிகம் 13.6%, தகவல் தொடர்பு, ஒலிபரப்பு 13%, வர்த்தகம் பழுது நீக்கல், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் 11.7% எனப் பங்களித்திருக்கின்றன. இரண்டாம் நிலைத் துறையினைப் பொருத்தவரையில் உற்பத்தி, கட்டுமானம் முறையே 8%, 10.6% வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன.
பயிர்த் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை முதன்மைத் துறையின் முக்கியமான பிரிவுகளாகும். இவ்விரண்டு பிரிவுகளும் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியினைப் பெற்றிருக்கவில்லை. பயிர்த் தொழில் -5.93% வளர்ச்சியினையும் கால்நடை வளர்ப்பு 3.84 சதவீதம் பதிவு செய்துள்ளன.
சென்னைப் பொருளியில் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான முனைவர். கே.ஆர். சண்முகம், 2021-22 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சியினைத் தமிழ்நாடு எய்தி வருவதாகத் தெரிவிக்கிறார். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த 9.7% என்ற வளர்ச்சி வீதத்தினைத் தக்கவைத்துக் கொண்டால், 2032-33 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.
அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
அ.தி.மு.க. தென் சென்னை வட்டச்செயலாளர் ‘ஐஸ்ஹவுஸ்’ மூர்த்தி நீக்கம்: இ.பி.எஸ்.
06 Apr 2025சென்னை : தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த வட்டக் கழக செயலாளர் ஐஸ்ஹவுஸ் எஸ்.
-
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெ.டன் உணவு பொருட்களை அனுப்பிய இந்தியா
06 Apr 2025புதுடெல்லி : நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்துள்ள மியான்மருக்கு அரிசி, சமையல் எண்ணெய், நூடுல்ஸ் மற்றும் பிஸ்கட்டுகள் என சுமார் 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா
-
1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை குறைக்கப்பட்ட தமிழ் பாடங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்
06 Apr 2025சென்னை : 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ் பாடப் பகுதிகள் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது.
-
வக்பு மசோதா நிறைவேற்றம்: தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு
06 Apr 2025பாட்னா : பீகாரில் தனது கட்சி ஆட்சி அமைத்தால் வக்பு திருத்த மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
06 Apr 2025ராமேஸ்வரம் : தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம் என்று தெரிவித்த பிரதமர் மோடி, தி.மு.க.
-
சி.பி.எம். கட்சியின் புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Apr 2025சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.ஏ.பேபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-04-2025.
06 Apr 2025 -
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்தியா வருகிறார்?
06 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம்மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார். தனது மனைவி உஷா வான்ஸ், மகன்களுடன் இந்திய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
-
இலங்கையில் தமிழர்களுக்காக 10,000 வீடுகள்: பிரதமர் மோடி
06 Apr 2025கொழும்பு : இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஏப். 5) வாக்குறுதி அளித்துள்ளார்.
-
பிரதமர் திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் பழுது
06 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சிறிது நேரத்திலேயே பழுதாகியுள்ளது.
-
எனக்கு கடிதம் எழுதும் தலைவர்கள், கையெழுத்தை தமிழில் போட வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
06 Apr 2025ராமேஸ்வரம் : எனக்கு கடிதம் எழுதும் தலைவர்கள், கையெழுத்தை தமிழில் போடுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகள்: கேரளாவை சேர்ந்தவர் உள்பட 11 பேர் கைது
06 Apr 2025சென்னை : ஐ.பி.எல்.
-
வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்படும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
06 Apr 2025ஊட்டி : வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பா? - நாம் தமிழர் சீமான் விளக்கம்
06 Apr 2025சென்னை : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தாக தகவல் வெளியானது.
-
கழிவுநீரை ஆற்றில் கலக்கும் மெக்சிகோ: கூட்டாட்சிக்கு அழைக்கும் அமெரிக்கா
06 Apr 2025நியூயார்க் : கழிவுநீரை ஆற்றில் கலக்க மெக்சிகோ முடிவு செய்துள்ள நிலைியல், கூட்டாட்சிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
-
ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவு: கெஜ்ரிவால் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
06 Apr 2025புதுடெல்லி : ஆட்சியில் இருந்தபோது பங்களாவை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவிட்டார் கெஜ்ரிவால் - பா.ஜ.க.
-
பலமான நாட்டின், பலவீனமான விமர்சனம்: அமெரிக்கா மீது ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
06 Apr 2025கீவ் : பலமான நாட்டின், பலவீனமான விமர்சனம் என்று அமெரிக்காவை குற்றஞ்சாட்டியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
-
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக திடீர் போராட்டம்
06 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக திடீர் போராட்டம் வெடித்துள்ளது.
-
குழாய்வழி குடிநீர் திட்டம் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த 1 கோடியே 11 லட்சம் குடும்பங்களுக்கு பயன் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
06 Apr 2025ராமேஸ்வரம் : கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் 12 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக குழாய்வழி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.