முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவநிர்மாண் சேனா கட்சியினருக்கு முதல்வர் பட்னாவிஸ் எச்சரிக்கை

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025      இந்தியா
Devendra-Padnavis 2023-07-2

Source: provided

மும்பை : யாராவது சட்டத்தை கையில் எடுத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்துள்ளார்.

நவநிர்மாண் சேனா கட்சியினர் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் மராத்தியில் பேச வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் தானே மற்றும் புனே மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று மேலாளரிடம் மராத்தி மொழியில் பேசவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

மேலும் ஊழியர் ஒருவரையும் தாக்கினர். அதேபோல தனியார் வங்கி ஒன்றில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகைகளை அகற்றினர். இவர்கள் நடவடிக்கைகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து முதல்வர்தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது, "மராத்தி மொழியை பயன்படுத்த வலியுறுத்துவது தவறில்லை. ஆனால் அவ்வாறு செய்யும் போது யாராவது சட்டத்தை கையில் எடுத்தால், அது பொறுத்துக்கொள்ளப்படாது. இவ்வாறு அத்துமீறி நடந்துகொண்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து