முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சல்கள் கொல்லப்படுவதில் யாரும் மகிழ்ச்சியடைவதில்லை : சத்தீஸ்கரில் அமித்ஷா பேச்சு

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025      இந்தியா
Amit-Shah 3

Source: provided

பஸ்தார் : நக்சல்கள் கொல்லப்படுவதில் யாரும் மகிழ்ச்சியடைவதில்லை. பழங்குடியின மக்களின் வளர்ச்சியை அவர்கள் தடுக்கமுடியாது. என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

சத்தீஸ்கரில் பஸ்தார் பகுதியில் அம்மாநில அரசு நடத்திய ‘பஸ்தார் பண்டம்’ எனப்படும் விழா நடைபெற்றது. இதன் நிறைவு விழாவான நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

அங்கு பேசிய அவர், “பஸ்தாரில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளின் காலம் முடிந்துவிட்டது. நக்சல் சகோதரர்கள் ஆயுதங்களை கைவிட்டு பொது நீரோட்டத்தில் கலந்துவிடுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.  நக்சல்கள் கொல்லப்படுவதில் யாரும் மகிழ்ச்சியடைவதில்லை.

நீங்கள் பழங்குடியின மக்களின் வளர்ச்சியை ஆயுதங்களின் மூலம் தடுக்கமுடியாது. இந்தப் பிரதேசத்திற்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பஸ்தார் பகுதிக்கு அனைத்தையும் வழங்கியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் பஸ்தார் பெரிய வளர்ச்சியைப் பெறவில்லை. தற்போது தாலுகாக்களில் சுகாதார வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அனைவருக்கும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, மருத்துவக் காப்பீடு போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

பஸ்தார் மக்கள் தங்கள் வீடுகளையும் கிராமங்களையும் நக்சல் இல்லாததாக இடங்களாக மாற்றினால் மட்டுமே உங்களுக்கு வளர்ச்சி ஏற்படும் வளர்ச்சிக்கு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் தேவையில்லை. கணினி, பேனாக்கள் மட்டுமே தேவை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்” என்று அவர் பேசினார்.

நக்சல்களை சரணடைய உதவிசெய்து, நக்சல் இல்லா பகுதியாக அறிவிக்கும் கிராமங்களுக்கு ரூ. 1 கோடி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் மற்றும் துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து