முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவுநீரை ஆற்றில் கலக்கும் மெக்சிகோ: கூட்டாட்சிக்கு அழைக்கும் அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2025      உலகம்
UAS 2025-04-06

Source: provided

நியூயார்க் : கழிவுநீரை ஆற்றில் கலக்க மெக்சிகோ முடிவு செய்துள்ள நிலைியல், கூட்டாட்சிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

மெக்சிகோ, கழிவுநீரை ஆற்றில் விடுவது அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சான் டியாகோ மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். மெக்சிகோ, சுமார் 400 மில்லியன் கேலன் (151.4 கோடி லிட்டர்) கழிவுநீரை டிஜுவானா ஆற்றில் வெளியேற்றத் தயாராகி வருகிறது. ஆனால், கழிவுநீரை ஆற்றில் வெளியேற்றுவதால், இது மெக்சிகோ மட்டுமின்றி, அமெரிக்கர்களுக்கும் நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதுகுறித்து, கலிஃபோர்னியாவின் சான் டியாகோ வாரியத்தின் மேற்பார்வையாளரான ஜிம் தேஸ்மன்ட் கூறுவதாவது, ``மெக்சிகோ, கழிவுநீரை ஒரு சுத்திகரிப்பு நிலையத்திற்கு திருப்பிவிடுவதற்குப் பதிலாக, ஆற்றில் விடுகிறது. இறுதியில் அது அமெரிக்காவிலும் கடலிலும்தான் முடிகிறது. டிஜுவானா ஆற்றிலிருந்து வரும் நச்சு ஓட்டம், தெற்கு கலிபோர்னியாவில் ஏராளமான கடற்கரை மூடல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களுக்கு வழிவகுத்துள்ளது.

மெக்சிகோ அதிகாரிகளிடமிருந்து பொறுப்புக்கூறல் இல்லாததால், நீடித்து வரும் மாசுபாடு பல ஆண்டுகளாக அதிகரிக்கிறது. கழிவுநீரின் துர்நாற்றம், குழந்தைகள் மற்றும் வயதானவர்களை நோய்வாய்ப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, கடற்படை வீரர்களும் அசுத்தமான நீர்நிலைகளுக்கு அருகில் பயிற்சி பெறுகிறார்கள். இதனால், அவர்களுக்கும் சுகாதார அபாயங்கள் ஏற்படும். துரதிர்ஷ்டவசமாக, மெக்சிகோவிடம் போதுமான கழிவுநீர் அமைப்பு இல்லாதது நமது பிரச்னையும்கூட. அது அவர்களுடைய பிரச்னை அல்ல. கூட்டாட்சி நடவடிக்கைக்கு இதுதான் உண்மையான நேரம் என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து