முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலமான நாட்டின், பலவீனமான விமர்சனம்: அமெரிக்கா மீது ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2025      உலகம்
Jelensky 2024 08 19

Source: provided

கீவ் : பலமான நாட்டின், பலவீனமான விமர்சனம் என்று அமெரிக்காவை குற்றஞ்சாட்டியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. விரைவில் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. அதிபர் ஜெலன்ஸ்கி சொந்த ஊரான கிரிவ்வி ரிக் பகுதியில் நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.

தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் பிரட்கெட் பிரிங், விளையாட்டு மைதானம், உணவகத்தில் நடந்த ஏவுகணை தாக்குதல் கொடூரமானது. இதற்காகவே போர் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் விமர்சனம் என்பது விரும்பத்தகாத ஆச்சர்யமாக உள்ளது. எத்தகைய வலிமையான நாடு, எத்தகைய வலிமையான மக்கள். ஆனால், பலவீனமான விமர்சனம் செய்கிறது. ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உயிரிழந்தால் கூட ரஷியா என்ற பெயரை உச்சரிக்கவே பயப்படுகின்றனர் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து