முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருநாள்: கவிஞர் வைரமுத்து வாழ்த்து

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-3 Viramuthu 2024-12-31

Source: provided

சென்னை : சித்திரை திருநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து, சித்திரை திருநாளையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

வா மெல்ல வா. பங்குனியின் கருவறைவிட்டுப் பார்த்துவா சித்திரையே. வரும் வழியெங்கும் மரம் செடிகொடிகளில் கையொப்பமிட்டுக் கடந்துவா. மலர்ந்த மலர்களில் தேனெடுத்துக் குயில்களின் தொண்டையில் ஊற்றிவிட்டு வா. புவிச்சூடு தாங்காத பூமிக்கு மேகங்களால் வெண்கொற்றக் குடைபிடி. காற்றின் ஈரத்தைக் கொள்ளை கொள்ளாத குளிர்ப்பதம் கொடு. மனித வாசல்கள்தோறும் மகரந்தக் கோலமிடு.

பூமிக்கு மகிழ்ச்சியைப் பொதுவுடைமை செய். தேர்வெழுதும் பிள்ளைகளுக்குத் தென்றல் கவரிகொண்டு வா. நாளும் உழைக்கும் மனித வாழ்க்கையில் நம்பிக்கை எழுதிப்போ. மதவாதம், ஊழல், பசி, பட்டினி என்ற சொற்களை ஒவ்வொரு மொழியிலும் உருவி உதறிவிடு. எங்கே ஒரு மாலை மழை சிதறு. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பொற்காசு போட்டுப்போ. தங்கம் விலை இன்னும் கூடுவதற்கு முன்னால் ஒரு கொடை கொடு. வா சித்திரையே வா மெல்ல வா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து