எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நமக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற முற்போக்கு, சமத்துவ எண்ணங்களும், சிந்தனைகளும் எல்லோரிடமும் ஏற்படவேண்டும். அதற்காக நாம் ஓயாமல் உழைக்கவேண்டும். வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது, ஆற்றல் வாய்ந்தது என்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த விழாவுக்கு வருவதற்கு முன்னால், சைதாப்பேட்டையில் தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கிய எம்.சி.ராஜா பெயரில் அமைந்திருக்கும் மாணவர் விடுதியை திறந்து வைத்துவிட்டு நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.
சகோதரர் திருமாவளவன் அந்த விடுதியில் தங்கிப் படித்தவர்தான். அதை திறந்து வைத்துவிட்டு அந்தக் கட்டிடத்தை சுற்றிப்பார்த்தோம். சுற்றிப்பார்த்த நேரத்தில் தன்னையே மறந்து அவர் சொன்னார், இங்கே தங்கி, மீண்டும் ஒரு ஐந்து வருடங்கள் படிக்கலாம் போல தோன்றுகிறது என்றார். இன்றைக்கு எல்லாருக்கும் அரசியல், சமூக அறிவியல் பாடம் சொல்லித் தருகின்ற சிந்தனையாளராக, கொள்கை பிடிப்புமிக்க அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார்.
இத்தகைய பெருமைக்குரிய விடுதியை திறந்து வைத்திருக்கின்ற இந்த நாளில், அந்த விடுதியில் முகப்புறத்தில் எம்.சி.ராஜாவின் மார்பளவு சிலை மிக விரைவில் வைக்கப்படும் என்பதை நான் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கிறேன். சென்னையில் இருக்கின்ற பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றுவரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த மாணவர்களுக்கு இந்த எம்.சி.ராஜா விடுதி பேருதவியாக நிச்சயமாக இருக்கும்.
ஆதிதிராவிடர்களுக்கு நலத்திட்ட உதவி செய்வதோடு நம்முடைய அரசினுடைய கடமை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. சுயமரியாதை சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்று இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். நம்முடைய பாதையும், பயணமும் மிக நீண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும், சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயத்தை அமைக்க வேண்டும்.
இதற்கான மாற்றம் தனிமனிதர்களில் தொடங்கி, சமூகத்தின் ஒட்டுமொத்த எண்ணமாக வெளிப்படவேண்டும். அப்போதுதான், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணிலேயும், மக்களுடைய எண்ணத்திலேயும் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்க முடியும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட வரலாற்றை கடந்து நூறு, இருநூறு ஆண்டுகளாக நாம் அடைந்திருக்கின்ற வளர்ச்சியும், வெற்றியும், சமூக மாற்றமும், கொஞ்சம்தான்.
நமக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற முற்போக்கு, சமத்துவ எண்ணங்களும், சிந்தனைகளும் எல்லோரிடமும் ஏற்படவேண்டும். அதற்காக நாம் ஓயாமல் உழைக்கவேண்டும். வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது, ஆற்றல் வாய்ந்தது என்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன். தமிழ், தமிழர் என்ற உணர்வுதான் நம்மை ஒன்றிணைக்கும். நம்முடைய பாதையில் இடர்கள் ஏற்படும், ஏற்படுத்தப்படும். அதையெல்லாம் உணர்ந்துதான் நம்முடைய உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதைத்தான் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் முதலானோர் செய்தார்கள்.
எதிரிகளையும் - எதிரிகளின் பரப்புரைகளையும் அடையாளம் கண்டு கொண்டாலே, அந்தத் தடைகளை உடைப்பது எளிதாகிவிடும். இந்தச் சமூகத்தில் ஆங்காங்கே நடைபெறுகின்ற ஒரு சில பிற்போக்குத்தனமான செயல்களைக் காட்டி, இதுதான், பெரியார் மண்ணா? இதுதான், அம்பேத்கர் மண்ணா? என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறவர்களின் எண்ணம் என்ன தெரியுமா? இந்த மண்ணில் இந்தக் கொடுமைகள் இன்னும் தொடர்கின்றதே என்ற கவலை கிடையாது.
அவர்களுடைய எண்ணம் “நீங்கள் மாற்றத்தை விதைத்துவிட்டதாக, பண்படுத்திவிட்டதாக பெருமைப்படுகின்ற மண்ணில் இன்னமும் எங்களுடைய பழமைவாதமும், பிற்போக்குத்தனமும், அடக்குமுறையும் இருக்கிறது” என்று காண்பிக்கின்ற ஆணவம்தான் அந்த பேச்சு. நம்முடைய உழைப்பால், சமூகத்தில் எஞ்சியிருக்கின்ற அந்தக் கொடுமைகளையும் நிச்சயம் களையெடுப்போம். சமூகப் பணிகளாலும், சட்டப் பணிகளாலும் சமத்துவத்தை நோக்கிய நகர்வுகளை நாம் சாத்தியப்படுத்தி ஆகவேண்டும்.
அதற்கு, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட மானிட சமுதாயத் தலைவர்கள் தந்திருக்கும் அறிவொளியில், மக்களோடு பயணிப்போம். பொது உடைமை, சமத்துவம், சமூகநீதி கொண்ட சமுதாயத்தை உருவாக்க அம்பேத்கர் பிறந்தநாளில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம்: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்
23 Apr 2025ஜெருசலேம் : காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இரு
-
காஷ்மீர் தாக்குதலில் தொடர்பா? - பாகிஸ்தான் அமைச்சர் மறுப்பு
23 Apr 2025இஸ்லாமாபாத் : காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
-
ஆனைமலையாறு, நல்லாறு விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்
23 Apr 2025சென்னை : ஆனைமலையாறு, நல்லாறு பேச்சுவார்த்தையில் கேரளா அரசு மெத்தனமாக உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற அலுமினிய முலாம் பூசிய 8 கிலோ தங்கம் பறிமுதல்
23 Apr 2025கொழும்பு : இலங்கைக்கு கடத்த முயன்ற அலுமினிய முலாம் பூசிய 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 2 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
-
சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அனுமதி
23 Apr 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்கா, ரஷ்யா கண்டனம்
23 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் அமெரிக்கா, ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது: மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
23 Apr 2025ஸ்ரீநகர் : பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது என்று
-
6.0 ரிக்டர் அளவில் துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்
23 Apr 2025அங்காரா : துருக்கியில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
டெல்டா பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்
23 Apr 2025சென்னை : டெல்டா பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
-
4.3 ரிக்டர் அளவில் குஜராத்தில் நிலநடுக்கம்
23 Apr 2025காந்திநகர் : குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
-
கொடியேற்றத்துடன் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்
23 Apr 2025தஞ்சை : உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமரின் கான்பூர் பயணம் ரத்து
23 Apr 2025புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மதுரை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல் : சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
23 Apr 2025மதுரை : சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
புனித பீட்டர் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி
23 Apr 2025ரோம் : போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் டொனால்டு டிரம்ப்
23 Apr 2025வாஷிங்டன் : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரோம் செல்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
-
இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
23 Apr 2025இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
-
பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா: கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்
23 Apr 2025லக்னோ : பாராட்டிப் பேச விரும்பிய லக்னோ அணியின் உரிமையாளரை சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற டில்லி அணி வீரர் கே.எல்.ராகுலில் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருக
-
விஸ்டன் சாதனை புத்தகத்தில் இடம்: பும்ரா, மந்தனாவுக்கு கவுரவம்
23 Apr 2025புதுடெல்லி : விஸ்டன் சாதனை புத்தகத்தில் பும்ரா, மந்தனா இடம்:பெற்றுள்ளனர்.
கிரிக்கெட் உலகின் பைபிள்...
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; சாய் சுதர்சன், கருண் நாயருக்கு வாய்ப்பு..?
23 Apr 2025புதுடெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன், கருண் நாயர் உட்பட 6 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2025
24 Apr 2025 -
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அஞ்சலி
24 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: சவுதி பயணத்தை பாதியில் முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
23 Apr 2025புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, சவுதி பயணத்தை பாதியில் முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார்.
-
ராகுல், பொரெல் அதிரடியால் டெல்லிக்கு 6-வது வெற்றி : லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸை வீழ்த்தியது
23 Apr 2025லக்னோ : ஐ.பி.எல்.
-
ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
24 Apr 2025வாஷிங்டன், அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்றும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் செல்வதைத் தவிர்க்குமாறும் அமெரிக்கா ப
-
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விரைவாக 5,000 ரன்கள்: கே.எல்.ராகுல் சாதனை
23 Apr 2025லக்னோ : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5,000+ ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் கே.எல்.ராகுல்.