முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துக்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      உலகம்
Pak-General-2025-04-17

இஸ்லாமாபாத், இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் புதன்கிழமை நடந்த வெளிநாட்டுவாழ் பாகிஸ்தானியர்களின் மாநாட்டில் பேசிய அசிம், பாகிஸ்தான் எவ்வாறு உருவானது என்பதை உங்களின் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்று பாகிஸ்தானியர்களை வலிறுத்தினார். 

கூட்டத்தில் பேசிய ராணுவ தளபதி கூறுகையில், "வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நாம் இந்துக்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்று நமது முன்னோர்கள் நம்பினார்கள். நமது மதம் வேறு, பழக்க வழக்கங்கள் வேறு, மரபுகள் வேறு, நமது சிந்தனைகள், நோக்கங்கள் வேறு. இங்கிருந்துதான் இரு நாடுகள் கொள்கைகான அடித்தளம் அமைக்கப்பட்டது. நாம் இரண்டு வேறு நாடுகள், ஒரே நாடு அல்ல.

நமது முன்னோர்கள் மகத்தான சாதனைகளைச் செய்துள்ளனர். மேலும் இந்த நாட்டை உருவாக்க நாம் நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம். இதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நமக்குத் தெரியும்.  பாகிஸ்தானின் கதையை ஒருபோதும் மறக்காதீர்கள். உங்களின் அடுத்த தலைமுறைக்கு பாகிஸ்தானின் கதையைச் சொல்ல மறக்காதீர்கள். அதன்மூலம் பாகிஸ்தானுடனான அவர்களின் உறவுகள் பலவீனமடையாமல் இருக்கும்.  தீவிரவாதிகளை நாம் விரைவில் விரட்டியடிப்போம்.  என்று தெரிவித்தார்.

கஷ்மீரைப் பற்றி பேசிய அசின் முனீர், "எங்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது, அது (காஷ்மீர்) எங்களுடைய கழுத்து நரம்பு, எங்களின் கழுத்து நரம்பாக இருக்கும். நாங்கள் எங்களின் காஷ்மீர் சகோதரர்களை அவர்களின் வீரமிக்க போராட்டத்தில் விட்டுவிட மாட்டோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து