முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா: கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      விளையாட்டு
KL-Rahul 2023-08-29

Source: provided

லக்னோ : பாராட்டிப் பேச விரும்பிய லக்னோ அணியின் உரிமையாளரை சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற டில்லி அணி வீரர் கே.எல்.ராகுலில் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

40-ஆவது ஆட்டம்...

ஐ.பி.எல். போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டில்லி கேபிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பா் ஜெயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. அதிரடியாக விளையாடிய டில்லி அணியின் கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 57* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். 

கண்டுகொள்ளாமல்...

போட்டி முடிந்ததும் வீரர்களுடன் கைகொடுக்கும் நிகழ்வில் பங்கேற்ற கே.எல்.ராகுல் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் கை கொடுத்துவிட்டு அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். அவரிடம் பாராட்டி பேச வந்த சஞ்சீவ் கோயங்காவை அவர் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் சஸ்வத்தும் பேச முற்பட்டார். ஆனால், கே.எல். ராகுல் விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த விடியோக்கள் தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

கடிந்து கொண்ட கோயங்கா... 

கடந்தாண்டு கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி சரியாக விளையாடவில்லை. மேலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற மிகப் பெரிய தோல்வியால், மைதானத்திலேயே கடிந்துகொண்ட சஞ்சீவ் கோயங்கா ராகுலிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான விடியோக்கள் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

பதிலடி...

சரியாக விளையாடவில்லை என லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை டில்லி அணி ஏலத்தில் எடுத்தது. கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி வருகிறார். மைதானத்தில் வைத்து அவமானப்படுத்தப்பட்டதற்கு அங்கு வைத்தே அவர் தனது ஆட்டத்தின் மூலம் திருப்பி கொடுத்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல். ராகுல் இந்தத் தொடரில், 3 அரைசதங்களுடன் 323 ரன்கள் குவித்து அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 8 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 10 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து