முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்னோ மெதுவான பந்துவீச்சு: கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ. 24 லட்சம் அபராதம்

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெதுவான பந்துவீச்சு...

மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் மும்பை அணி 215 ரன்கள் எடுத்த நிலையில், சேஸிங் செய்த லக்னோ 20 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில், முதலில் பந்துவீசிய லக்னோ அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22ன் படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரூ. 24 லட்சம் அபராதம்...

இது இரண்டாவது முறை என்பதால் ரிஷப் பந்துக்கு ரூ. 24 லட்சமும், இம்பேக்ட் வீரர் உள்பட அணியின் மற்ற வீரர்களுக்கு ரூ. 6 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஏப்ரல் 4 ஆம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக லக்னோ அணியின் கேப்டன் பந்துக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

ராஜஸ்தான் அணி... 

மேலும், இந்த சீசனில் மூன்றாவது முறையாக லக்னோ அணி மெதுவாக பந்துவீசும் பட்சத்தில் ரிஷப் பந்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும். ஏற்கெனவே இந்த சீசனில் ராஜஸ்தான் அணி இரண்டு முறை மெதுவாக பந்துவீசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து