முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராஜிநாமா

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

காத்மாண்ட்: நேபாளத்ன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோபால் பரஜுலி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பரஜுலி தனது பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அவரதுஆவணங்களை நேபாள நீதித் துறை கவுன்சில் ஆய்வு செய்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தேதியை கணக்கில் கொண்டால், ஓய்வு பெறுவதற்கான 65 வயது வரம்பை பரஜுலி ஏழுமாதங்களுக்கு முன்பே அதாவது கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதியே எட்டியிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பரஜுலியின் குடியுரிமை மற்றும் கல்விச் சான்றிதழ்களில் சான்றுகளில் பிறந்த தேதி மாறி மாறி குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக் காட்டி அவரை தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்குவதாக நீதித்துறை கவுன்சில் புதன்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி பதவியை ராஜிநாமா செய்வதாக பரஜுலி வியாழக்கிழமை அறிவித்தார். இதற்கான கடிதத்தை அதிபர் பித்யா தேவி பண்டாரியை நேரில் சந்தித்து அவர் வழங்கினார்.

பரஜுலியின் ராஜிநாமாவையடுத்து, தாற்காலிக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை தீபக் ராஜ் ஜோஷி வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து