முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நள்ளிரவு கூட கால் பண்ணுங்க! கிம்முக்கு தனிப்பட்ட மொபைல் எண்ணை வழங்கிய அதிபர் டிரம்ப்

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு எனது தனிப்பட்ட மொபைல் எண் வழங்கியுள்ளேன். நள்ளிரவு என்பது கூட பார்க்காமல் எந்த நேரமானாலும் தொடர்பு கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் அண்மையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்துப் அமைதி ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

இந்தச் சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

கிம் ஜாங் உன்னுடன் நடந்த சந்திப்பு மிக முக்கியமானது. இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. எனது தனிப்பட்ட மொபைல் எண்ணை அவருக்கு தந்துள்ளேன். சர்வதேச பிரச்சினைகள் உட்பட எதுவாக இருந்தாலும் நள்ளிரவு என்று கூட பார்க்காமல் எந்த நேரமும் தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளேன். எனவே வட கொரியாவிடம் இருந்து புதிய செயல்பாட்டை எதிர்பார்க்கிறேன் என்று டிரம்ப் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து