முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரம் - பரப்பலாறு அணையில் பூங்காக்கள் அமைக்க கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணை ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. பரப்பலாறு அணையை சுற்றிலும் அதிகளவில் மரங்கள், மூலிகை தாவரங்கள், காட்டு விலங்குகள் ஆகியவை வசித்து வருகிறது. பரப்பலாறு அணை மூலம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2323 ஏக்கர் பாசன நிலங்ககள் பாசன வசதி பெறுகிறது. ஒட்டன்சத்திரம் பகுதியின் முக்கிய நீராதாரமாக பரப்பலாறு அணை விளங்கி வருகிறது. பரப்பலாறு அணையை ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல் ஆகிய ஊர்கள் உள்பட மதுரை, திருச்சி, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் சென்று ரசித்து வருகின்றனர். பரப்பலாறு செல்லும் நுழைவாயிலிருந்து பரப்பலாறு அணை வரை இருபுறமும் முட்புதர்கள் அதிகமாக இருப்பதால் பரப்பலாறு அணைக்கு சுற்றிபாக்க செல்லும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பரப்பலாறு அணைக்கு செல்லும் தார்சாலை சிதைந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் பாதங்களை கற்கள் பதம் பார்க்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் இது குறித்து பா.ம.க.வைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கூறுகையில் பரப்பலாறு அணை பல ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் வாழ் பொதுமக்களுக்கு முக்கிய நீரதாரமாக திகழ்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை தற்போது வரை எந்தவித பராமரிப்பும் இன்றி அடிப்படை வசதிகளின்றி உள்ளது. இங்கு யாணை, சிறுத்தை, காட்டுமாடு, காட்டெருமை, குரங்கு, மயில், சாம்பல்நிற அணில்கள் ஆகியன வாழ்ந்து வருகிறது இதனை பார்iவியட விடுமுறை நாட்களில் பல ஊர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை அணையை பார்ப்பதற்கு அனுமதிப்பதில்லை.  அணையின் நுழைவாயிலேயே பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த அணையை தூர்;வார கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்தும் தற்போது வரை தூர்வாரப்படாமலேயே உள்ளது.  எனவே பரப்பலாறு அணையை தூர்வாரி, சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி பயிலும் மாணவ-மாணவிகள் வந்து செல்லும் வண்ணம் பொழுது போக்கு பூங்காக்கள், கழிப்பிட வசதிகள், மின் வசதி மற்றும் மின் விளக்குகளை அமைத்தால் அரசிற்கு வருவாய் அதிகரிக்கும் என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து