முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எளிய வழி இருக்கு

தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கண்டறிய, போன் தொலையும் முன்னரே உங்களது ஸ்மார்ட்போனின் கூகுள் செட்டிங்-ஐ செயல்படுத்தி இருக்க வேண்டும். மேலும் லொகேஷன் ரிபோர்டிங் ஆப்ஷன் செட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும். தொலைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை டிராக் செய்ய முதலில் கணினி அல்லது லேப்டாப் மூலம் பிரவுஸர் ஒன்றை ஓபன் செய்து, பின் உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பதிவு செய்திருந்த கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்து, இறுதியாக கூகுளில் "find my phone" என டைப் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கும் இடம் தெரியும். துல்லியமாக அறிந்து கொள்ள "Ring button" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

முதல் அணு உலை எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா?

உலகின் முதல் அணு உலை எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா... அமெரிக்காவில் உள்ள மொன்டானா மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள பாலைவனப் பகுதியான இடாகோ என்ற இடத்தில் 1951 டிசம்பரில் அமைக்கப்பட்டது. சோதனை ஓட்டமாக இதிலிருந்து அப்போது எடுக்கப்பட்ட மின்சாரத்திலிருந்து வெறும் 200 வாட் பல்புகள் மட்டுமே எரிய பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர் வெற்றிகரமாக 1954 இல் உலகின் முதன் அணு உலை ரஷ்யாவில் உள்ள Obninsk APS-1 என்ற இடத்தில் நிறுவப்பட்டது. இதன் மூலம் 5 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் 1955 இல் அருகில் உள்ள ஆர்கோ என்ற சிற்றூருக்கு இதன் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்விஸ் பந்து பயிற்சி

தொப்பையை குறைக்க நிறைய பயிற்சிகள் வந்தாலும் ஸ்விஸ் பந்தை வைத்து செய்யும் உடற்பயிற்சி நல்ல பலனை தருகின்றன. ஸ்விஸ் பந்தை உங்கள் முதுகு பக்கத்திற்கும், சுவற்றிற்கும் இடையே வைத்து மெதுவாக கீழே இறங்கி பயிற்சி செய்ய வேண்டும். 3 மாதம் இப்படி செய்து வந்தால் தொப்பை குறையும்.

புதிய வழி

பயனாளர்கள் தங்களுடைய பாஸ்வேடை மறக்காத வண்ணம் இருக்க நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் எமோஜியை பாஸ்வேடாகப் பயன்படுத்தும் வசதி வர உள்ளது. இந்த லாகின் முறையை எப்படி எளிதாக்கலாம் என்று தீவிர முயற்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பயனாளர்கள் தங்கள் உணர்வின் அடிப்படையில் பாஸ்வேடுக்கான எமோஜிகளை தேர்வு செய்யலாம்.

மின்சக்தியால் தாக்கும் மீன்

'போராக்' என்று அறியப்படுகிற இந்த மின்சார ஈல் மீன் வகை தென் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதன் நீளம் 2.5 மீட்டர் வரை இருக்கலாம். குறைவான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சக்தியுடைய அத்தகைய மீன்களில் சுமார் 250 வகைகள் காணப்படுகின்றன. 'போராக்' வகை விலாங்கு மீன்களே அதிக சக்தி வாய்ந்த மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சார சக்தியை இரையை வேட்டையாடுவதற்கும், தற்காத்து கொள்ளவும் இவை பயன்படுத்தி கொள்கின்றன. இத்தகைய மின்சார விலாங்கு மீன் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவலை அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சிகத்தின் ஸ்மித்சோனியன் நிலையத்தின் விஞ்ஞானி ஒருவர் 'நேச்சர் கம்யூனிகேஷன்' என்ற அறிவியல் இதழில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மின்சார விலாங்கு மீனின் இரண்டு புதிய வகைகளை கண்டுபிடித்துள்ளார். அதில் ஒன்று 860 வால்ட் மின்சாரத்தை வெளியிடும் சக்தியுடையது. இத்தகைய மீனிடம் இருந்து அதிக அளவிலான மின்சாரம் வெளியிடும் ஆற்றலை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் ஒரு முதலையை கொல்ல முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

இன்றைய நவீன ஆடையான டி சர்ட் எப்போது தோன்றியது தெரியுமா?

இன்றைக்கு நவீன பேஷனில் ஒன்று கலந்து விட்ட டி சர்ட் தொடக்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் 19 ஆம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டும். 1898 மற்றும் 1913 ஆகிய நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற மெக்சிகோ அமெரிக்க போரின் போதுதான் டி சர்ட் அணியும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு 1913 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை தங்களது வீரர்களுக்கு டி சர்ட்களை விநியோகித்தது. ஆனால் 1920 களில்தான் அதன் பெயர் டி சர்ட் என்ற பெயரை பெற்றது.  F. Scott Fitzgerald என்ற நாவலாசிரியர்தான் முதன் முதலில் தனது நாவலில் அதற்கு டி சர்ட் என்ற பெயர் வைத்தார். பின்னர் அதுவே நிலைத்தது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் டி சர்ட்கள் விற்பனையாகின்றன என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 6 days ago