முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கத்திரிக்காய் ரோஸ்ட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

கத்திரிக்காய் ரோஸ்ட் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. பெரிய கத்திரிக்காய் – 2.
  2. முட்டை – 3.
  3. மிளகுத்தூள்  - 1/2 ஸ்பூன்.
  4. சீரகத்தூள்  - 1/4 ஸ்பூன்.
  5. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம்.
  6. பொடியாக நறுக்கிய  பச்சை மிளகாய் - 3.
  7. பொடியாக நறுக்கிய மல்லி இலை -  சிறிதளவு.
  8. கோதுமை மாவு  -  4 ஸ்பூன்.
  9. அரிசி மாவு - 2 ஸ்பூன்.
  10. பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை.
  11. எண்ணெய் – 1/2 லிட்டர்.
  12. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 2 பெரிய கத்திரிக்காயை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு  நன்றாக கலந்து 10 நிமிடம் கத்திரிக்காயை ஊற வைத்துக்கொள்ளவும்.
  3. 10 நிமிடம் கழித்து கத்திரிக்காயை நன்றாக பிழிந்து தண்ணீர் இல்லாமல் ஒரு பாத்திரத்தில் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  4. பிழிந்து வைத்துள்ள கத்திரிக்காயில் 3 முட்டையை உடைத்து ஊற்றவும், இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்,1/4 ஸ்பூன்  சீரகத்தூள்,பொடியாக நறுக்கிய 100 கிராம் சின்ன வெங்காயம்,
  5. பொடியாக நறுக்கிய 3 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு மற்றும் 4 ஸ்பூன் கோதுமை மாவு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  6. இதனுடன் 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர் போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய்  சூடானவுடன் கத்திரிக்காய்,முட்டை மற்றும் அரிசி மாவு  போட்டு கலந்து தயார் செய்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டையாக  எடுத்து கடாயில் போட்டு பொரிக்கவும்.
  9. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான கத்திரிக்காய் ரோஸ்ட் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago