முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவில் இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 2 வீரர்கள் பலி

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      உலகம்
Gaza 2024-09-11

காசா, காசாவின் ரபா பகுதியில்  இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இதுவரை இல்லாத அளவில் இப்போது நடைபெறும் போர் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல்  இடைவிடாமல் நடத்தும் தாக்குதல்களால் அங்கு வாழும் பாலஸ்தீன மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதே போல் ஹமாஸ் நடத்தும் பதில் தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பிலும் சேதம் ஏற்படுகிறது. 

இந்நிலையில், காசாவின் ரபா பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.  காசாவில் உள்ள ரபா பகுதியில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எதிரிகளின் தாக்குதல் காரணமாக விபத்து ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானப்படையின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து