முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மட்டன் பிரியாணி

Cooking time in minutes: 
50
Ingredients: 

மட்டன் பிரியாணி பிரியாணி செய்யத் தேவையான பொருள்கள்;

  1. மட்டன் - 300 கிராம்.
  2. சீரக சம்பா பிரியாணி அரிசி - 1/2 கிலோ.
  3. நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்.
  4. நெய் - 2 ஸ்பூன்.
  5. பிரியாணி இலை – 2.
  6. சோம்பு – 1/2 ஸ்பூன்.
  7. பட்டை – 3.
  8. கிராம்பு – 4.
  9. அன்னாசிப்பூ – 2.
  10. ரோஜா மூக்கு – 1
  11. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
  12. மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்.
  13. பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்.
  14. இஞ்சி – 20 கிராம். 
  15. இஞ்சி,பூண்டு விழுது - 50 கிராம்.
  16. சின்ன வெங்காயம் – 7
  17. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்  4.
  18. பொடியாக நறுக்கிய தக்காளி – 2.
  19. தயிர் 2 ஸ்பூன்.
  20. எலுமிச்சை பழ சாறு  1/2 ஸ்பூன்.
  21. தேங்காய் - 1/2 மூடி.
  22. பொடியாக நறுக்கிய புதினா – சிறிதளவு.
  23. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு.
  24. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. பட்டை 2,கிராம்பு 4,அன்னாசிப்பூ 1,ரோஜா மூக்கு 1,பொடியாக நறுக்கிய பூண்டு 10 பல்,இஞ்சி 20 கிராம்,சின்ன வெங்காயம் 7 ஆகியவற்றை மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  2. 1/2 மூடி தேங்காய்யை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் குக்கரை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய்யை ஊற்றவும்,
  4. எண்ணெய் சூடானவுடன் சுத்தம் செய்த 300 கிராம்  மட்டனை போட்டு நன்றாக வதக்கவும்.
  5. சிறிதளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு குக்கரை முடி 3 விசில் வரும் வரை வேக விடவும். 
  6. அடுப்பில் குக்கரை வைத்து பிரியாணி இலை 2,அன்னாசிப்பூ1,பட்டை 1,சோம்பு 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  7. பொடியாக நறுக்கிய புதினா சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு, பொடியாக நறுக்கிய தக்காளி 2,இஞ்சி,பூண்டு விழுது 50 கிராம், மஞ்சள் தூள்  1/2 ஸ்பூன்,மிளகாய் தூள் 1 ஸ்பூன், வேக வைத்த மட்டன்  ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறிவிடவும்.
  8. இதனுடன் சுத்தம் செய்த சீரக சம்பா பிரியாணி அரிசி 1/2 கிலோ, தயிர் 2 ஸ்பூன்,எலுமிச்சை பழ சாறு  1/2 ஸ்பூன், நெய் 2  ஸ்பூன்,உப்பு தேவையான அளவு, 4 கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய் பால் ஊற்றி கலந்து விட்டு குக்கரை முடி 3 விசில் வரும் வரை வேக விடவும். 
  9. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு  போடவும்.
  10. சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்