Idhayam Matrimony

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-1-2025-04-07

சென்னை, மீனவர் விடுதலை-கச்சத் தீவு விவகாரத்தில் பெரிய அளவில் எந்த முன்னெடுப்புகளும் இல்லை என்றும் பிரதமர் மோடியின் இலங்கை 

பயணம் ஏமாற்றமும், வருத்துமுள் அளிப்பதாக உள்ளது என்றும் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம் தெரிவித்தார்.

தமிழ்நாடு மீனவர் நலன் தொடர்பாக, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி 110-ன்கீழ் அறிவித்து பேசியதாவது:-தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்க, கடந்த ஏப்.2ம் தேதி அன்று தமிழக சட்டமன்றத்தில் மீனவர்கள் பிரச்சினை குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். அப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ள படகுகளைத் திருப்பித் தரவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியிருந்தோம். இலங்கை சென்றிருந்த பிரதமர் இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதிலே குறிப்பிட்டிருந்தோம். அந்தத் தீர்மானத்தை பிரதமருக்கு உடனடியாக அனுப்பியும் வைத்திருந்தோம்.

இந்த நிலையில், பிரதமர் இலங்கை சென்றிருந்தார். அப்போது மீனவர் விடுதலை மற்றும் கச்சத் தீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், சிறையில் வாடும் 97 மீனவர்களும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளும் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவது கடந்த சில மாதங்களாக நம் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கி வரக்கூடிய செய்தியாகும். மத்திய அரசும், இந்தியப் பிரதமரும் நமது கோரிக்கைகளைப் புறக்கணிக்கின்றார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும், நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நாம் தவறமாட்டோம்.

தி.மு.க. அரசு அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். மீனவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்தல், அவர்களது மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற பல்வேறு புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், குறிப்பாக, மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், தங்கள் பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன்பிடிப்பிற்குச் செல்லும்போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களைக் களைவதற்கு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தாலும்கூட, இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து நமது மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுடைய படகுகள் சிறைப்பிடிக்கப்படுவதும், அந்தப் படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதுமான செயல்கள் நம்முடைய தொடர் வலியுறுத்தல்களையும், கோரிக்கைகளையும் மீறி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து