முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் நிலைகளை மேம்படுத்திட ஏரிகளின் ஆரம்ப கட்ட பணிகள்:அமைச்சர் கே.பி. அன்பழகன் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      தர்மபுரி

 

தருமபுரி மாவட்டத்தில் நீர் நிலைகளை மேம்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த கன்மாய்களில் 150 கி.மீ. தூரம் தூர் வாரப்பட்டுள்ளது, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தொடர்ந்து கன்மாய்கள் தூர் வாரப்பட்டு வருகிறது, மேலும், நீராதாரம் இல்லாததால் கைவிடப்பட்டு பயன்பாட்டில் இல்லாமலிருந்த 129 ஆழ்துளைக் கிணறுகள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏரிகள் மற்றும் கன்மாய்களில் நிறைந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீராதாரம் குறைவதுடன், சுற்றுச்சூழலுக்கும் பாதகமாக உள்ளதால் அவற்றிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற, வனத்துறை மூலம் மதிப்பீடு பெறப்பட்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி ரூ ஊராட்சித் துறையால் ஏலம் விடப்பட்டு அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்மதிப்பீடுகளின் அடிப்படையில், மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி மற்றும் கன்மாய்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிடும் நோக்கோடு முதற்கட்டமாக பொதுப் பணித்துறையில் தாமரை ஏரி, புலிக்கல் ஏரி, கிருஷ்ணாபுரம் சின்ன ஏரி, பெரிய ஏரி, சோகத்தூர் ஏரி, அன்னசாகரம் ஏரி மற்றும் பாலக்கோடு வட்டாரத்தில் சாமனூர் சாலி ஏரி மற்றும் காரிமங்கலம் வட்டாரத்தில் கெரகோடஅள்ளி கிராமத்தில் பொன்னேரி ஏரி பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மேலும், 2016-17 - ஆம் ஆண்டு தாய் திட்டத்தின் கீழ்; மேலும் 45 ஏரிகள் ரூ.10.25 கோடி மதிப்பீpட்டில் மேம்படுத்தப்படும் போது சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள அனைத்து சீமைக்கருவேல மரங்களையும் அகற்றிட மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் போது கலெக்டர் கே.விவேகானந்தன்,இ.ஆ.ப., பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.பழனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், கோட்டாட்சியர் இராமமூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், முன்னாள் பால்வளத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்