முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.கே.நகரில் வீட்டில் வைத்து புதிய திரைப்படங்களின் போலி டிவிடிக்கள் தயாரித்த 4 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      சென்னை

சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்தில் திரைக்கு வந்த புதிய தமிழ் திரைப்படங்களை உரிமம் பெறாமல் டிவிடிக்களில் பதிவு செய்து , அவற்றை பர்மா பஜார் மற்றும் சென்னை மாநகரில் உள்ள பல கடைகளுக்கு சப்ளை செய்பவர்களையும், கடைகளில் விற்பனை செய்பவர்களையும் கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவ`ல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு, திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு மற்றும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னையில் தீவிர சோதனைகள் மேற்கொண்டு, போலியான முறையில் டிவிடிக்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, கே.கே.நகர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின்பேரில், எண்.1047, முனுசாமி சாலை, கே.கே.நகர் என்ற முகவரியிலுள்ள சி.டி. கடையில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு உரிமம் பெறாத சமீபத்தில் திரைக்கு வந்த புதிய தமிழ் திரைப்படங்களின் போலி டிவிடிக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதன்பேரில், போலி டிவிடிக்கள் வைத்திருந்த குற்றவாளி முருகன் (36). 12வது செக்டர், கே.கே.நகர், என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், அவருக்கு புதிய திரைப்படங்களின் போலி டிவிடிக்களை சப்ளை செய்த ஜமால் (35), த/பெ ரகமதுல்லா, எண்.2/17, கண்ணம்புலி தெரு, குமணன் சாவடி, என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஜமால் அவரது வீட்டிலேயே ரைட்டிங் மிஷின்கள் மூலம் உரிமம் பெறாத டிவிடிக்களை தயார் செய்து, கடைகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. மேலும், விருகம்பாக்கம், தேவி கருமாரியம்மன் கோயில் தெரு, எண்.24 என்ற முகவரியில் உள்ள வீட்டில் போலி டிவிடிக்களை தயார் செய்த செந்தில்முருகன் (33), மற்றும் அவரது நண்பர் ஸ்ரீதர் (24) விருகம்பாக்கம், ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், செந்தில்குமார் மேற்படி வீட்டில் ரைட்டிங் மிஷின்கள் மூலம் உரிமம் பெறாத திரைப்படங்களின் போலி டிவிடிக்களை தயாரித்து, கடைகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.மேற்படி முருகன் மற்றும் செந்தில்குமார் வீடுகளிலிருந்து சமீபத்தில் திரைக்கு வந்த புதிய தமிழ் பட டிவிடிக்கள், பதியப்படாத டிவிடிக்கள் உட்பட 1,500 டிவிடிக்கள், 3 டிவிடி ரைட்டிங் மிஷின்கள், 3 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் பணம் ரூ.23,850/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முருகன், ஜமால், செந்தில்முருகன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில்அடைக்கப்பட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்