முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியின் போது இறந்த ராணுவ வீரருக்கு அரசு மற்றும்ராணுவ மரியாதை செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமைலைப்புதூரைச் சேர்ந்த சிவசக்திவேல் 20ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார்.தற்போது திருவள்ளூர்
மாவட்டம் ஆவடியில் உள்ள ராணுவ பீரங்கி பயிற்சியாளராக பணியாற்றினார்.கடந்த இரு தினங்களுக்கு முன் காலை டீ72 என்ற ரஷிய ரக பீரங்கியில் பயிற்சிக்கு எடுத்து
சென்றார்.அப்போது திடீரென சிலிண்டர் திறந்து வாயு வெளியேறியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.பீரங்கியில் உள்ள அவசர கால கதவு திறக்கப்படாததால் அவர் வெளியேற முடியவில்லை.உடன் சென்ற ரவி என்பவர் கொடுத்த தகவிலின் பேரில் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்துள்ளனர்.ஆவடி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.உடலை கைபற்றிய ஆவடி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனார்.பிரேத பரிசோதனை முடிந்து அவர் சொந்த கிராமமான கடமைலைக்கு அவரது உடல் வந்தது.அங்கு அவருக்கு தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம்,மாவட்டகாவல் துறை கண்கானிப்பாளர் பாஸ்கர் மற்றும் ஊர் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.பின்பு அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.சிவசக்திவேலுக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் 7வயது மகளும் 5வயது மகனும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து