முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோளிங்கர் பெண்கள் மேல்நிலைபள்ளியில் 1233 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா: அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      வேலூர்
Image Unavailable

 

சோளிங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1233 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 472 மாணவிகளும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 41மாணவர்களும், குட்லெட் மேல்நிலைப்பள்ளியில் 316மாணவர்களும், ரெண்டாடி அரசு மேல்நிலைபள்ளிக்கு 157 மாணவர்களுக்கும், கொடைக்கல் மேல்நிலைபள்ளிக்கு 132, ஒழுகூர் மேல்நிலைபள்ளிக்கு 115 மாணவர்களுக்கும் ஆக 6 அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.1கோடியே 52லட்சம் மதீப்பீட்டில் தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா சோளிங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கலெக்டர் இராமன் தலைமை தாங்கினார்.

விலையில்லா மடிகணினி

வேலூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரும் முன்னாள் சோளிங்கர் பேரூராட்சியின் தலைவர் ஏ.எல்.விஜயன், முன்னாள் நகர செயலாளர் இராமு, ஜம்புகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பெல் கார்த்திகேயன், வேலூர் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முல்லைவேந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.பி.கோபாலகிருஷ்ணன், காவேரிப்பாக்கம் சரவணன் சம்பத், மாவட்ட எம்.ஜி.ஆர். இணைசெயலாளர் ஆதிமூலம், முன்னாள் பேரூராட்சிமன்ற உறுப்பினர்கள் நரசிம்மன், மணிகண்டன், யுவராஜ், முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர்கள் சம்பத், அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்ராக பத்திரபதிவு துறை மற்றும் வணிகவரிதுறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பேசியதாவது: தமிழக அரசின் புரட்சிதலைவி ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த 14திட்டங்களில் அதில் ஒன்று மடிகணினியை மாணவ மாணவிகளுக்கு வழங்கும் திட்டம். வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 30இடங்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதில் சோளிங்கர், கொடைக்கல், ரெண்டாடி, ஒழுகூர், குட்லெட் பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி ஆகிய 6பள்ளிகளுக்கு சேர்ந்து 1233 மாணவர்களுக்கு மடிகணினி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் கல்வி திட்டத்தை கொண்டு மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதேபோல் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சிதலைவி ஜெயலலிதா அவர்கள் மிதிவண்டி வழங்கும் திட்டம், மடிகணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார் புரட்சிதலைவி அம்மா அவர்கள்தான். தமிழகத்ததை முதன்மை மாநில வல்லரசு நாடு வளர்ச்சி நாடாக கொண்டு வரவேண்டும் என நினைத்தவர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் ஈஸ்வரபாபு, வீரகுமார், அப்துல்ரஷீம், பிச்சைகாரன், நித்தியானந்தம், மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா முடிவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து