மாநில தலைவர் பதவியிலிருந்து விலகலா? தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      தமிழகம்
tamilisai soundararajan  2017 8 24

 சென்னை,  தமிழக பா.ஜ.க தலைவர் பதவியை தாம் ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவல்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

 சமூக வலைதளங்களில் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்துவிட்டாரா? என்கிற தகவல் தீயாக பரவியது. இதனை சில பாஜக நிர்வாகிகளும் ஷேர் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி எதுவும் இல்லை.. இது போன்ற செய்திகளைப் பதிவிடுபவர்களுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு எதுவும் இல்லை,  இவர்களைக் கூப்பிட்டு அமித்ஷா கூறிவிட்டாரா என்ன? என மறுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து