முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹபீஸ் சயீதை சட்டப்படி தண்டிக்க வேண்டும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் உட்பட பல சதிகளை செய்த ஹபீஸ் சயீது ஒரு தீவிரவாதி. சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்று பாகிஸ்தான் அரசை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை ஏற்படுத்தியவர் ஹபீஸ் சயீது. தற்போது ஜமாத் உத் தவா என்ற புதிய அமைப்பை உருவாக்கி உள்ளார். இவர் மீது பல்வேறு தீவிரவாத குற்றச்சாட்டுகள் உள்ளன. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹபீஸ் சயீதை, கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் அரசு விடுவித்தது. அதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தியது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி, ‘‘ஹபீஸ் சயீது மீது பாகிஸ்தானில் எந்த வழக்கும் இல்லை. ஏதாவது வழக்கு இருந்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, ஹபீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்’’ என்றார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நவ்ரெட் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீது. அந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியாயினர். அவருடைய லஷ்கர் இயக்கத்தை, வெளிநாட்டு தீவிரவாத பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. அவர் ஒரு தீவிரவாதி. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமை. ஹபீஸ் சயீது எல்லா சட்டங்களின்படியும் தண்டிக்கப்பட வேண்டும். அதை பாகிஸ்தான் அரசு செய்யும் என்று நம்புகிறோம். எங்கள் கருத்தை பாகிஸ்தான் அரசுக்கு கடுமையாக எடுத்துரைத்து விட்டோம். இவ்வாறு ஹீதர் நவ்ரெட் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து