2,935 பயனாளிகளுக்கு ரூ.11.71 கோடி நிதியுதவி தமிழக துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      தேனி
ops 11 2 18

 தேனி -தமிழ்நாடு துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம்   தேனி என்.ஆர்.டி மண்டபத்தில் சமூகநலத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்  .ந.வெங்கடாசலம்,  தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2,935 பயனாளிகளுக்கு ரூ.11.71 கோடி நிதியுதவி, திருமாங்கல்யத்திற்கு ரூ.6.53 கோடி மதிப்பிலான தங்க காசுகளை வழங்கினார்.

விழாவில்,   தமிழ்நாடு துணை முதலமைச்சர்   பேசும்போது தெரிவிக்கையில்,
 ஜெயலலிதா  காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு தமிழக மக்கள் வாழ்விற்கு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நீண்ட காலத்திற்கு பயன்தரும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு ஏற்படுத்தி திட்டங்களின் பயன் நேரடியாக பொதுமக்களை சென்றடையும் வண்ணம் திறம்பட செயல்படுத்தி வருகிறது. மேலும்,   இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையின்படி, கருவுற்ற காலங்களில் ஏற்படுகின்ற வருவாய் இழப்பினை ஈடு செய்திடும் பொருட்டு, கர்ப்பிணித்தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு, டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ.12,000ஃ-மாக வழங்கப்பட்ட வந்த நிதியுதவியினை தற்போது ரூ.18,000  மாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பெண் சிசு கொலையை முற்றிலும் தடுப்பதற்காக 1991-ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை என்னும் சீரிய திட்டத்தை மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தினை அன்னை தெரசா அவர்கள் நேரடியாக அம்மா அவர்களின் இல்லத்திற்கு வந்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் வரப்பெற்ற குழந்தைகள் தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி நல்ல நிலையில் உள்ளனர்.
 பெண்களின் திருமணம் ஏழ்மையின் காரணமாக காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், பெண்கல்வியை ஊக்குவிப்பதற்காகவும், குடும்பத்தில் திருமணத்தால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை போக்குவதற்காகவும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு ரூ.25,000 - நிதியுதவியும், 4 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு ரூ.50,000ஃ- நிதியுதவியும், 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்ததை 2016-ஆம் ஆண்டு மேம்படுத்தி ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கத்தினை 8 கிராமாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டார்கள். அதனைத்தொடர்ந்து இத்திட்டத்தினை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்பதின் அடையாளமாக தற்போது பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு 1,185 பயனாளிகளுக்கு ரூ.2.96 கோடி நிதியுதவியும், 9,480 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு 1,750 பயனாளிகளுக்கு ரூ.8.75 கோடி நிதியுதவியும், 14,000 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
   இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கர்ப்பிணி பெண்களின் மனம் மகிழ்ச்சியடைவதற்காகவும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் உடல்நலம் சிறப்பாக பேணிக்காத்திடவும் சமுதாய வளைகாப்பு திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்த தமிழக அரசு இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.  மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு பெண்களுக்கு விலையில்லா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 24.02.2018 முதல் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளது. ஆண்களுக்கு பெண் நிகரானவர்கள் என்பதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதுபோன்ற பெண்கள் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் பயன்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும்  என மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்   ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர்   செ.பொன்னம்மாள்  , கம்பம் சட்டமன்ற உறுப்பினர்  .எஸ்.டி.கே.ஜக்கையன்  , மாவட்ட சமூக நல அலுவலர்   உமையாள்  , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ச.தங்கவேல் அவர்கள், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர்  கிருஷ்ணவேனி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து