எகிப்து ராணுவத்தின் தீவிரவாத வேட்டை: 12 பேர் பலி

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      உலகம்
Egypt army 2018 02 12

கெய்ரோ,  தீவிரவாதிகளுக்கு எதிராக எகிப்து ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதி முதல் எகிப்து நாட்டில் தீவிரவாத தாக்குதல் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் தீவிரவாதிகளை ஒழிக்கும்படி ராணுவத்துக்கு அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது.

அதன் ஒரு பகுதியாக எகிப்து பாதுகாப்பு படையினர் சினாய் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களைக் குறி வைத்து தீவிர தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் 60 தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 92 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த தகாவல்கள் அனைத்தும் எகிப்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து