ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை - தென்ஆப்பிரிக்க வீரர் ரபாடா முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      விளையாட்டு
Rabada 2018 3 13

கேப்டவுன் : தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

சமநிலையில்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு இன்னிங்ஸ்களிலுமாக 11 விக்கெட்டுகளை சாய்த்த தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

2 போட்டிகளில்...

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்த ரபாடா, உற்சாக வெறியில் ஸ்மித்தின் தோளில் மோதினார். அவரது இந்த நடவடிக்கை தொடர்பாக போட்டி நடுவர்கள் புகார் அளித்ததை அடுத்து, இத்தொடரின் எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

902 புள்ளிகளுடன்...

இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரபாடா முதலிடம் பிடித்துள்ளார். 902 புள்ளிகளுடன் 15 புள்ளிகள் இடைவெளியுடன் அடுத்த இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். பந்துவீச்சுத் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த நான்காவது தெ.ஆ. வீரர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இரு டெஸ்டுகளில் தடை விதிக்கப்பட்டதால் டெஸ்ட் தொடரில் மேலும் பங்குபெற முடியாமல் போன ரபாடாவுக்கு இந்தத் தகவல் ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் சதமெடுத்து அசத்திய டி வில்லியர்ஸ், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 7-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

டெஸ்ட் தரவரிசை பட்டியல்

பேட்ஸ்மேன்கள்

1. ஸ்டீவ் ஸ்மித்.
2. விராட் கோலி.
3. ஜோ ரூட்.
4. கேன் வில்லியம்சன்.
5. டேவிட் வார்னர்.
பந்துவீச்சாளர்கள்
1. ககிசோ ரபாடா.
2. ஜேம்ஸ் ஆண்டர்சன்.
3. ஜடேஜா.
4. அஸ்வின்.
5. ஹேஸில்வுட்.

ஆல்ரவுண்டர்கள்

1. ஷகிப் அல் ஹசன்.
2. ஜடேஜா.
3. அஸ்வின்.
4. பென் ஸ்டோக்ஸ்.
5. பிளாண்டர்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து