முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் உளவாளி மீதான நச்சுத் தாக்குதல் விவகாரம்: பிரிட்டனின் நடவடிக்கைக்கு தக்க பதிலடி கிடைக்கும் ரஷியாஅதிபர் புடின் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: முன்னாள் உளவாளி மீது நிகழ்த்தப்பட்ட நச்சுத் தாக்குதல் தொடர்பாக ரஷியாவுக்கு எதிராக பிரிட்டன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:
முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மீதும், அவரது மகள் மீதும் நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட விவகாரத்தில், பிரிட்டன் பொறுப்பற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக பிரிட்டன் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு தக்க பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த நடவடிக்கைகள் ரஷியாவின் நலனை மையமாகக் கொண்டதாக இருக்கும்.
ரஷியாவைச் சேர்ந்த செர்கெய் ஸ்க்ரிபால் (66), கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் அந்த நாட்டின் ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், பிரிட்டனின் உளவுப் பிரிவான எம்ஐ6-இலும் ரகசியமாக இணைந்த அவர், ரஷிய ராணுவ உளவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி பிரிட்டனுக்கு ரகசியத் தகவல்களை அளித்து வந்தார்.
எனினும், அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷிய அதிகாரிகள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்க்ரிபாலை கைது செய்தனர்.

அதையடுத்து, ராணுவ ரகசியங்களைக் கசியவிட்டதன் மூலம் தேசத் துரோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், செர்கெய் ஸ்கிரிபாலும், மேலும் இரு கைதிகளும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டனர். ஸ்கிரிபாலுக்கு பிரிட்டன் அடைக்கலம் அளித்தது.

இதையடுத்து, வில்ட்ஷைர் மாகாணத்தின் சாலிஸ்பரி நகரில் தனது மகளுடன் அவர் வசித்து வந்தார்.

இந்தச் சூழலில், செர்கெய் ஸ்க்ரிபாலும், அவரது 33 வயது மகள் யுலியாவும் பூங்கா ஒன்றில் இந்த மாதம் 4-ஆம் தேதி மயங்கிய நிலையில் கண்டறியப்பட்டனர்.

அவர்கள் மீது மர்ம நச்சுப்பொருள் செலுத்தப்பட்டதன் காரணமாக அவர்களது உடல்நிலை ஆபத்தான நிலையை அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு ரஷியாவே காரணம் என்று பிரிட்டன் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரஷியாவுக்கு தெரசா மே கெடு விதித்திருந்தார்.

எனினும், அந்தக் கெடுவை ரஷியா புறக்கணித்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை பிரிட்டன் பிரதமர் தெரசா மே புதன்கிழமை அறிவித்தார்.

ரஷியத் தூதரகத்தைச் சேர்ந்த 23 அதிகாரிகள் ரகசிய உளவாளிகளாக அறிவிக்கப்படுவதாகவும், அவர்கள் அனைவரும் ஒரு வாரத்துக்குள் பிரிட்டனை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

ரஷியாவுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பிரிட்டனுக்கு வருமாறு ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பு ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ரஷியா இவ்வாறு கூறியுள்ளத

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து