முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி மொழியை மேம்படுத்த 3 ஆண்டுகளில் ரூ. 349 கோடி செலவு

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : இந்தி மொழியை மேம்படுத்த 3 ஆண்டுகளில் 349 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

இந்தி மொழியை மேம்படுத்துவதற்காக 2009 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் மட்டும் 348.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஐ. கேள்விக்கு மொழியியல்துறை இந்த பதிலைத் அளித்துள்ளது. பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் மற்ற மொழிகளுக்கு ஏன் அதே முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு அரசியலமைப்பின் 343-வது பிரிவின் கீழ் இந்தி ஒரு அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என மொழியியல் துறை பதில் தெரிவித்துள்ளது. மொழியியல் துறையை தொடர்ந்து மனிதவள மேம்பாட்டு துறை தங்களின் மூன்று பயிற்சி நிறுவனங்கள் மூலம் இந்தி மொழியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. சிஎச்டி, சிஐஎச், சிஎஸ்டிடி போன்ற பயிற்சி நிறுவனங்கள் மூலம் மனிதவள மேம்பாட்டுத்துறை இந்தி மொழியை பயிற்றுவித்து வருகிறது.

முன்னாள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான கபில் சிபல் 2009 ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளும் முதல் 2 மொழிகளுடன் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் 68000 அதிகாரிகள் மத்திய அரசின் இந்தி பயிற்சி நிறுவனங்கள் மூலம் இந்தி பயின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தி மொழியை பேசாத 20000 பேர் தொலைதூர கல்வி மூலம் இந்தி பயின்றிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து