முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டார்பக்ஸ் காபியில் புற்றுநோய் வேதிப்பொருட்கள் கலிபோர்னிய நீதிபதிகள் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

கலிபோர்னியா: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் விற்கப்படும் காபியில் அதிக அளவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதாக கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இது சம்பந்தமாக ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட துரித உணவு கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அதன் மூலம் முக்கியமான பல உணவுக் கட்டுப்பாடு விதிகளை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கடைபிடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்டார்பக்ஸ் இந்தியாவிலும் நிறைய கிளைகளை கொண்டுள்ளது. முக்கியமாக சென்னையில் சமீபத்தில் சில கிளைகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்பக்ஸ் மட்டுமில்லாமல் பல பெரிய துரித உணவு கடைகளுக்கு இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மெக்டொனல்ட்ஸ், டன்கின் டோனட்ஸ் ஆகிய கடைகளுக்கும் இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இவர்கள் வழங்கும் காபி, கூல்டிரிங்ஸ் ஆகியவற்றில் அதிக அளவில் வேதிப்பொருள் இருக்கலாம் என்று நீதிபதி கூறியுள்ளார். இதில் கலந்து இருக்கும் அதிகப்படியான வேதிப்பொருட்கள் புற்றுநோயை உருவாக்கலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

காபியில் அதிக சுவை கொடுக்க வேண்டும் என்று சில தேவையில்லாத வேதிப்பொருட்களை அதிகமாக கலப்பதாக கலிபோர்னியா நீதிபதிகள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். முக்கியமாக வடிகட்டிய காபிகளில் இதுபோன்ற வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது. இந்த நிலையில் காபியில் அதிக அளவில் வேதிப்பொருட்கள் கலக்கவில்லை என்று ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை இதுவரை அந்த நிறுவனம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் கொடுக்கவில்லை. இதனால் முதற்கட்ட விசாரணையில் அந்த நிறுவனம் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் காரணமாக புகையிலை பொருட்களில் இருப்பது போல காபி கப்களிலும் புற்றுநோய் எச்சரிக்கை புகைப்படங்கள் இடம்பெற வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். காபி மூலம் எப்படி புற்றுநோய் ஏற்படுகிறது என்ற எச்சரிக்கை வசனத்துடன், புகைப்படம் இடம்பெற்ற கப்புகளை பயன்படுத்த நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து