முதல்வர் எடப்பாடிக்கு மலர் கொடுத்து அனுப்பி கவர்னர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      தமிழகம்
GOVERNOR 2017 11 15

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், இன்று சித்திரை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மலர்க் கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்தின் விவரம் வருமாறு:-
‘‘விளம்பி புத்தாண்டு பிறந்திருக்கிறது. இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக மலர தங்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்துக்கு அமைதியையும், சுபீட்சத்தையும் ஆண்டவன் வழங்கட்டும்’’.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். தனக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னருக்கு முதல்வர் தனது நன்றியை தெரிவித்து கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், ‘‘தமிழ்ப் புத்தாண்டையொட்டி தாங்கள் அனுப்பிய செய்தி, மலர்க்கொத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து