முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்தில் 10 நாட்களுக்குப் பிறகு குகையில் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் உயிருடன் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

பாங்காக்: தாய்லாந்தில் குகை ஒன்றில் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் 10 நாட்கள் நடந்த பல போராட்டக்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. குகையிலிருக்கும் சிறுவர்கள் குறித்த வீடியோவை தாய்லாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தாய்லாந்து நாட்டின் மாசே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ நீளம் உடையதாகும். இந்தக் குகைக்குள் கடந்த வாரம் 11 வயது முதல் 16-வயது வரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்குள் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப்பயிற்சியாளரும் சென்றார். ஆனால், இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப்பகுதி முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்தச் சிறுவர்களையும்,  காணாமல் பல்வேறு இடங்களில் அணி நிர்வாகம் தேடியுள்ளது. தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு குகையில் சிக்கிக் கொண்டிருந்து கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் இருக்கும் இடத்தை நேற்று அதிகாலை கண்டுபிடித்துள்ளனர். குகையிலிருந்து இன்று என்ன கிழமை எங்களுக்கு பசிக்கிறது. நாங்கள் வெளியே செல்ல வேண்டும் என்று சிறுவர்கள் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுவர்களை கண்ட மகிழ்ச்சியில் பெற்றோர்கள் திளைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து