முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- சாலைவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிதிஉதவி வழங்கப்பட்டது.
    ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கலெக்டர் முனைவர் நடராஜன்  நேரடியாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோட்டாட்சியர் அலுவலகத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சான்றுகளின் நிலுவை விபரங்கள் குறித்தும், நில ஆவணங்களில் கணினி திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, ராமநாதபுரம் வட்டம், பட்டணம்காத்தான் குரூப், குருவிக்காரத் தெருவைச் சேர்ந்த முருகபாண்டி என்ற முகம்மது பாரூக் என்பவர் 29.09.2016 அன்று ராமநாதபுரம் ஜனார்த்தன் மாளிகை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்ததையடுத்து, அவரது மனைவி பரக்கத் நிஷா என்பவருக்கும்,  பட்டணம்காத்தான் குரூப் லெட்சுமிபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த முனியசாமி என்பவர் தெற்குதரவை விலக்குரோட்டில் 20.01.2017 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்ததையடுத்து அவரது மனைவி லதா என்பவருக்கும் என 2 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1லட்சம் வீதம் காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
 அதேபோல ராமநாதபுரம் வட்டம்,  உச்சிப்புளியில் உள்ள என்மணங்கொண்டான் பகுதியைச் சார்ந்த கே.மலைமேகு என்பவர் தனது 5 வயது  மகன் முகேஷ்பாண்டிக்கு இரத்த அணுக்கள் உற்பத்தி குறைவு நோய் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கி உதவிட வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.50ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் நடராஜன் வழங்கினார். இந்த நிகழ்வுகளின் போது ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, ராமநாதபுரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து