முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட்: ஒரு இன்னிங்ஸ், 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி 2 இன்னிங்ஸிலும் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 246/8 ரன்களை எடுத்தது. இந்திய வீரர் சிராஜ் 5-56 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டை இழந்து 584 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் 220, பிரித்வி ஷா 136 அபாரமாக ஆடினர்.

இதன் தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. இறுதி நாளான செவ்வாய்க்கிழமை 128.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து அந்த அணி 308 ரன்களை எடுத்தது. ரூடி செகண்ட் 94, வொன்பெர்க் 50, ரன்களை எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 5-73 விக்கெட்டை வீழ்த்தினார்.

இரு இன்னிங்ஸையும் சேர்த்து சிராஜ் மொத்தம் 10 விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து