முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி இல்லாதது அணிக்கு பாதிப்பு இல்லை - முன்னாள் வீரர் கங்குலி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் அணிக்கு பாதிப்பு இல்லை என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இன்று பாக்...

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், ஆங்காங் அணிகள் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி நேற்று ஹாங்காங்கையும், இன்று பாகிஸ்தானையும் சந்திக்கிறது. கேப்டன் விராட் கோலிக்கு இந்தப் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

பி.சி.சி.ஐ. பதிலடி

கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒளிபரப்பு நிறுவனம் இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று புகார் அளித்தது. அணி தேர்வு தொடர்பான வி‌ஷயத்தில் யாரும் தலையிட முடியாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதிலடி கொடுத்து இருந்தது.

சம வாய்ப்பு

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி இல்லாததால் பாதகமாக அமையலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில் விராட் கோலி இல்லாததால் அணிக்கு பாதிப்பு இல்லை என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கங்குலி தெரிவித்துள்ளார். விராட் கோலி அணியில் இல்லாதது பாதிப்பு இல்லை. அவர் இல்லாவிட்டாலும் இந்திய அணி சிறப்பானது தான். இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே ஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து