முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹீரோ ஆகிறாரா கேப்டன் விராட் கோலி?வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு!

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை,இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான போஸ்டார் வெளியாகி வைராலாகியுள்ளது.

காதல் திருமணம்....இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி. இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அனுஷ்காவும் விராட்கோலியும் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளனர். இருவரும் இணைந்தும் விளம்பரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் அனுஷ்காவைத் தொடர்ந்து விராட்கோலியும் சினிமாவுக்கு வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆக்‌ஷன் ஹீரோ...இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆக்ரோஷமான ஆக்‌ஷன் மூடில் விராட்கோலி சூப்பர் ஹீரோவாக வருவதுபோலவும் பின்னணியில் கார்கள் மோதி நிற்பது போலவும் உள்ளன. போஸ்டருக்கு கீழே, ’பத்து வருடத்துக்குப் பிறகு இன்னொரு அறிமுகம். காத்திருக்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் விராட்கோலி.

டைட்டில் ’டிரைலர்’....அறிமுகம் விராட்கோலி என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த போஸ்டரில் ’டிரைலர்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். கீழே கேப்ஷனாக, தி மூவி என்று குறிப்பிட்டுள்ளனர். வரும் 28 ஆம் தேதி இது வெளியாகிறது எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் இது திரைப்படம் பற்றிய அறிவிப்பாக இருக்குமா அல்லது விளம்பரத்துக்கான போஸ்டரா என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர். இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து