முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்கழி மாதத்தில் தெய்வீக செந்தமிழில் மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்திட சித்தர் கூடம் சார்பில் சிறப்பு பயிற்சி:

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் மாதங்களில் சிறந்த மார்கழி  மாதத்தில் தெய்வீக செந்தமிழில் மந்திரங்கள் ஓதி வழிபாடு செய்திட சித்தர் கூடம் சார்;பில் பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறப்புடன் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
மாதங்களில் சிறந்த மார்கழி மாதம் பீடைமாதம் அல்ல.பீடு நிறைந்த மாதமாக கருதப்படுகிறது. ஆண்டிற்கு 12 மாதங்களையும்,வாரத்திற்குரிய 7 நாட்களையும் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆண்டுகளின் பெயர் துவக்கத்தில் இருந்து மீண்டு வரும் செயல் திட்டத்தையும் வகுத்தவர்கள் இந்த மண்ணுலகின் இயற்கையின் விதிகளை ஆராய்ந்த பதினெண் சித்தர்களும்,பதினெட்டாம்படி கருப்புகளும் ஆவார்கள்.இவர்களின் கருத்துப்படி மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம் தான்.எந்த காரியம் துவக்க வேண்டும் என்றாலும் இந்த மார்கழியில் தான் துவக்க வேண்டும்.அதாவது திருமணம்,கால்கோள் விழா,குருகுலக் கல்வி,வழிபாட்டு நிலைய பூஜைகள் முதலிய அனைத்தும் மார்கழி மாதத்தில் தான் செய்திட வேண்டும் என்து தெய்வீக செந்தமிழ் மொழி இந்து மதத்தில் சட்டபூர்வமான, அதிகாரப்பூர்வமான விதியாகும்.அனைத்து வகையான கலை வல்லார்களும் இந்த ஒரு திஙகட்குரிய முப்பது நாட்களும் அதிகாலையில் தங்களுடைய கலைகளை பயிற்சி செய்தால் மிகவும் நல்லது.அவர்கள் ஆண்டு முழவதுமுள்ள 11 மாதங்களில் பயிற்சி செய்யாவிட்டாலும் பாதகமில்லை என்று குருவாக்கு,குருவாக்கியம்,குருவாசகம், குருபாரம்பரியம் முதலியவை தெளிவாக கூறுகின்றன.
இதனை புரிந்து இனிமேலாவது நம்மவர்கள் மார்கழி மாதத்தை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்திட்ட 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அரசயோகிக் கருவூரார் அவர்கள் அண்டபேரண்டமாளும் அருளுரு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்திட வழிசெய்துள்ளார்கள்.அதன்படி திருமங்கலம் நகர் வாகைக்குளம் பிரிவு பகுதியில் அருள்மிகு விநாயகர்கோவிலில் தற்போது மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் அதிகாலை நேர சிறப்பு பூஜைகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.இதில் சிறப்பு அம்சமாக மார்கழி மாத அதிகாலை பூஜைகள் அனைத்தும் 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் அருளியுள்ள தெய்வீகச் செந்தமிழ் மொழியில் நடத்தப்பட்டு வருகிறது.அதிலும் குறிப்பாக காயத்ரி மந்திரம் மற்றும் இதர மந்திர மந்திரங்கள் அனைத்தும் தெய்வீகச் செந்தமிழில் பாமர மக்களும் புரிந்து கொண்டு ஓதிடும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.அதே போல் கள்ளிக்குடியில்ஆதரவற்ற குழந்தைகளுக்காக இயங்கி வரும் சித்தர் கூடம் நம் குழந்தைகள் இல்லத்திலும் குழந்தைகளுக்கான கூட்டுபூசை,தியானம் போன்ற பயிற்சிகளும் தெய்வீக செந்தமிழில் வழங்கப்பட்டு வருகிறது.இது பக்தர்கள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து