2வது ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை 21 ரன்னில் வீழ்த்தி நியூசிலாந்து தொடரை வென்றது

சனிக்கிழமை, 5 ஜனவரி 2019      விளையாட்டு
NZ-SL 2019 01 05

மவுண்ட் மவுங்கானுய் : ஒருநாள் கிரிக்கெட் இலங்கையை 21 ரன்னில் வீழ்த்திய நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றியது.

319 ரன்கள் குவிப்பு...

நியூசிலாந்து - இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் 4 வீரர்கள் ரன் அவுட்டாகினர்.

இலங்கை தோல்வி...

அதன்பின், 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் களமிறங்கினர். குணதிலகா பொறுப்புடன் ஆடி 71 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில் இலங்கை 46.2 ஓவரில் 298 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக இலங்கை வீரர் திசாரா பெரேரா தேர்வானார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து