முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றிகரமான சேசிங்: 5 ஆயிரம் ரன்னை கடந்த விராட் கோலி

செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

நேப்பியர் : வெற்றிகரமான சேசிங்கில் 5 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய கேப்டன் விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.

2-வது வீரர்...

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 60 ரன் எடுத்தார். இதன்மூலம் அவர் வெற்றிகரமான சேசிங்கில் 5 ஆயிரம் ரன்னை தொட்டார். 80 இன்னிங்சில் அவர் 5004 ரன்னை எடுத்தார். சராசரி 96.23 ஆகும். இதில் 21 சதமும், 20 அரைசதமும் அடங்கும். இந்த ரன்னை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். தெண்டுல்கர் 5490 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். கோலி கேப்டன் பதவியில் வெற்றிகரமாக ரன் சேசிங்கில் 2050 ரன் (27 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார்.

‘டாப் 5’ வீரர்கள் வருமாறு:-

1. தெண்டுல்கர் (இந்தியா) 5490 ரன் (124 இன்னிங்ஸ்)- சராசரி 55.45.
2. விராட் கோலி (இந்தியா) 5004 ரன் (80 இன்னிங்ஸ்)- சராசரி 96.23.
3. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 4186 ரன் (104 இன்னிங்ஸ்) -சராசரி 57.34.
4. காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) 3950 ரன் (100 இன்னிங்ஸ்)- சராசரி 56.42.
5. ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) 3750 ரன் (90 இன்னிங்ஸ்)- சராசரி 46.87.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து