ஆப்கன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      உலகம்
Afghan army 2019 03 11

காபூல், ஆப்கான் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 60 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படையின் உதவியோடு ஆப்கான் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்த நிலையில் லாகர், வார்டாக், பாக்டிகாக் ஆகிய மாகாணங்களில் தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழியாகவும், தரை வழியாகவும் ஆப்கான் ராணுவத்தினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

போர் விமானங்கள் இடைவிடாது குண்டு மழை பொழிந்ததில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் நிர்மூலமாக்கப்பட்டன. அத்துடன் தலிபான்களுக்கான ரேடியோ கோபுரம் மற்றும் அவர்களின் ஆயுதகிடங்குகளும் அழிக்கப்பட்டன. இந்த அதிரடி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 60 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தகவலை ஆப்கான் ராணுவம் தெரிவித்துள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து