முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தலை முன்னிட்டு நாளை முதல் 24-ம் தேதி வரையிலான முதல்வரின் பிரசார கூட்ட சுற்றுப்பயணம்

புதன்கிழமை, 20 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாடாளுமன்றத்தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 24 தேதி வரையிலான பிரசார பயணத்தை தொடங்குகிறார். அவர் மூன்று நாட்களில் 39 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரத்தை நாளை சேலம் மாவட்டம் விநாயகர் திருக்கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு தொடங்குகிறார். இதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு வாழப்பாடி அயோத்தியாபட்டினம் ஆகிய இடங்களிலும் தர்மபுரி நாடாளுமன்றம் மற்றும் பாப்பிரெட்டி இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதி உள்ளிட்ட 10இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து வேலூர் மற்றும் திருவண்ணாமலை அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 23-ம் தேதி காலை வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை நாடாளுமன்றத்தொகுதி வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்தும் அரக்கோணம் தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் குடியாத்தம் தொகுதியில் இரவு 9.30 மணி வரை இடைவிடாமல் 19 இடங்களில் முதல்வர் பிரசாரம் மேற்கொள்கிறார். மறுநாள் 24-ம் தேதி வேலூர் மாவட்டம், அரக்கோணம் தொகுதியில் காலை 8.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் முதல்வர் எடப்பாடி, சோளிங்கர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஐந்து இடங்களிலும் அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் ஆகியவை உள்ளிட்ட 10 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயண விபரம்.

சேலம் மாவட்டம்:

22-ம் தேதி காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் கருமந்துறை (செல்வ விநாயர் திருக்கோயில்).
பகல் 12 மணிக்கு வாழப்பாடி.
பகல் 1 மணிக்கு அயோத்தியாபட்டிணம், தருமபுரி.
மாலை 4 மணிக்கு தொப்பூர்.
மாலை 5 மணிக்கு நல்லம்பள்ளி.
மாலை 5.30 மணிக்கு தர்மபுரி டவுன்.
மாலை 6,30 மணிக்கு பென்னாகரம்.
மாலை 7,30 மணிக்கு பாப்பாரப்பட்டி.
இரவு 8.30 மணிக்கு பாலக்கோடு.
இரவு 9,15 க்கு காரிமங்கலம்.

வேலூர் மாவட்டம்:

23 ம் தேதி காலை 9.30 மணி திருப்பத்தூர்.
காலை 10 மணி ஆசிரியர் நகர்.
காலை 10,30 மணி ஜோலார்பேட்டை.
பகல் 11.30 மணி வாணியம்பாடி டவுன்.
பகல் 11.40 மணி முதல் பகல் 1 மணிவரை ஆம்பூர் டவுனில் 4 இடங்கள்.
மாலை 4 மணி ஆம்பூர் பைபாஸ்.
மாலை 5 மணி உமாராபாத்.
மாலை 6 மணி பேரணாம்பட்டு.
மாலை 7 மணி குடியாத்தம் பஜார்.
இரவு 7.30 மணி கே.வி.குப்பம்.
இரவு 8 மணி லத்தேரி.
இரவு 8.30 மணி சித்தூர் பேருந்து நிலையம்.
இரவு 9 மணி வேலூர் புது நகராட்சி.
இரவு 9.30 மணி மண்டித்தெரு.

வேலூர் மாவட்டம்:

24 ம் தேதி காலை 8.30 மணி வள்ளலார்.
காலை 9.30 மணி ஆற்காடு பேருந்து நிலையம்.
காலை 10 மணி முத்துக்கடை பேருந்து நிலையயம்.
பகல் 10.45 மணி சோளிங்கர் பேருந்து நிலையம்.
பகல் 11.30 மணி பானாவரம் கூட்டுரோடு.
பகல் 12 மணி காவேரிபாக்கம் பூங்கா.
பகல் 12.30 மணி பனப்பாக்கம் பேருந்து நிலையம்.
பகல் 1 மணி நெமிலி.
மாலை 4 மணி அரக்கோணம்.
மாலை 5.15 மணி அரக்கோணம் பேருந்து நிலையம்.

திருவள்ளூர் மாவட்டம்:

மாலை 5.15 மணி திருத்தணி.
மாலை 6.15 மணி திருவள்ளூர்.
இரவு 7,15 மணி தாமரைப்பாக்கம் கூட்டுரோடு.
இரவு 7.மணி கும்மிடிபூண்டி.
இரவு 9 மணி பொன்னேரி.
இரவு 9.30 மணி மீஞ்சூர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து