முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ விவகாரம் மூலம் ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் காங். - அமித் ஷா கடும் தாக்கு

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ராணுவ விவகாரத்தை வைத்து காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். அவர் மேலும் நிருபர்களிடம் பேசியதாவது:-

தற்போதைய பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என காங்கிரஸ் நம்புகிறதா ? ராகுல் ஆலோசகர் சாம் பிட்ரோடாவின் சமீபத்திய பாகிஸ்தான் கருத்து தவறானது. புல்வாமா தாக்குதல் வழக்கமானது அல்ல. ராணுவ விஷயங்கள் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்புவது தேசிய பாதுகாப்போடு விளையாடுவதற்கு சமம். தாக்குதலில் வீர மரணம் அடைவதையும், நமது ராணுவத்தையும் ஓட்டு வங்கிக்காக பயன்படுத்தக் கூடாது. காங்கிரஸ் தன்னை மாற்றி கொள்ள வேண்டும்.

பிட்ரோடா கருத்து குறித்து ராகுல் ஏன் அமைதியாக உள்ளார். காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் காங்கிரஸ் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயங்கரவாதிகளை பா.ஜ.க. அரசால் தான் முடிவுக்கு கொண்டு வர முடியும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து