முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆராய்ச்சி உபகரணங்களை நிலவுக்கு அனுப்பும் நாசா

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அடுத்த இரு ஆண்டுகளில் நிலவுக்கு ஆராய்ச்சி உபகரணங்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

2024-ம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள நாசா அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி, ஆய்வு உபகரணங்களை நிலவுக்குக் கொண்டு செல்வதற்கான லேண்டர்களை தயாரிக்க ஆஸ்ட்ரோபோட்டிக், இண்டூவ்டைவ் மெசின்ஸ் ஆர்பிட் பியாண்ட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு வடிவங்களில் லேண்டர்களை தயார் செய்யும். அவை அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் நிலவுக்கு நாசாவின் 23 உபகரணங்களைக் கொண்டு செல்லும். அந்த உபகரணங்கள், நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நாசாவுக்குத் தகவல்களை வழங்கும். 1972-ம் ஆண்டுக்குப் பின்னர் நிலவுக்கான திட்டத்தில் நாசா இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து