முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹங்கேரியில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 21 பேரை தேடும் பணி தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

புடாபெஸ்ட் : ஹங்கேரியில் சுற்றுலாப் படகு விபத்துக்குள்ளானதையடுத்து, தண்ணீரில் மூழ்கிய 21 நபர்களை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

ஹங்கேரி நாட்டில் டான்யூப் ஆற்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளானது. ஆற்றில் சென்று கொண்டிருந்த ரோந்து கப்பல் படகு மீது மோதியதில், சுற்றுலாப்படகு ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. படகில் சென்றவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்தனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 21 பேரைக் காணவில்லை. அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. எனினும் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. விபத்துக்கு காரணமான ரோந்து கப்பலின் கேப்டனை ஹங்கேரி போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் காங் கியுங்-வா அவசர கால சிறப்புப் படையுடன் விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நம்பிக்கையை கைவிடாமல், காணாமல் போன அனைவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. யாரேனும் விபத்தில் உயிர் பிழைத்துள்ளனரா என்பதையும் உறுதிபடுத்துவோம் என்றார். விபத்துக்குள்ளான சுற்றுலாப் படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து