முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் அதிபர்கள் டிரம்ப் - புதின் சந்திப்பு

சனிக்கிழமை, 8 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திக்க உள்ளார்.

2019-ம் ஆண்டுக்கான ஜி-20 மாநாடு நேற்று நடந்தது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைச் சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்பை, ரஷ்ய அதிபர் புடின் சந்திக்க உள்ளதாக ரஷ்ய அதிபர் அலுவலகம் கிரெம்லின் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கிரெம்லின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஷ்கோவ், ஜி-20 மாநாட்டின் போது ரஷ்ய அதிபர், டிரம்ப் சந்திக்கலாம். இச்சந்திப்பு நிகழ்ந்தால் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்று தெரிவித்தார். 

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா இடையே பனிப்போர் நடந்துவரும் நிலையில் இருநாட்டு அதிபர்களின் சந்திப்பு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து